காஞ்சிபுரத்தில் பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஒட்டப்பட்ட “நாளைய முதல்வரே” சுவரொட்டியால் பரபரப்பு


காஞ்சிபுரத்தில் பன்னீர்செல்வத்தை ஆதரித்து ஒட்டப்பட்ட “நாளைய முதல்வரே” சுவரொட்டியால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Oct 2020 7:37 PM IST (Updated: 6 Oct 2020 7:37 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரத்தில் பன்னீர்செல்வத்தை ஆதரித்து “நாளைய முதல்வரே” என்று வாழ்த்தி ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

அதிமுக செயற்குழு கூட்டம் முடிந்த போது, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். இதனால் அதிமுகவினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டதில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட நிர்வாகி ஒருவர், “நாளைய முதல்வரே” என ஓ.பன்னீர்செல்வத்தை வாழ்த்தி போஸ்டர் ஒட்டி உள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே பல்வேறு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பன்னீர்செல்வத்தை வாழ்த்தி ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story