தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் பொதுமக்கள் உள்பட அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த செப்டம்பர் 22ந்தேதி உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அளித்த சிகிச்சையின் பலனாக விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story