அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 9:47 AM IST (Updated: 7 Oct 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வருகை தந்தனர். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை,

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே  அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது.  ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்பது குறித்த விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்தது. இந்த நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது. 

இதன்படி, இன்று காலை 10 மணியளவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.  இதனால், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். காலை 9.30 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் அதிமுக தலைமை அலுவகலத்திற்கு வருகை தந்தனர். இருவரையும் தொண்டர்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். 

Next Story