மாநில செய்திகள்

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் பழனிசாமியின் ஆதரவாளர்கள் 6 பேர் ; ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 5 பேர் + "||" + In the AIADMK Steering Committee Palanisamy had 6 supporters; 5 supporters of O. Panneerselvam

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் பழனிசாமியின் ஆதரவாளர்கள் 6 பேர் ; ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 5 பேர்

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் பழனிசாமியின் ஆதரவாளர்கள் 6 பேர் ; ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 5 பேர்
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 6 பேரும் , ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 5 பேரும் இடம் பெற்று உள்ளனர்.
சென்னை

அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7  (இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.

கடந்த சில தினங்களாகவே  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.  குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும்  மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது. 

இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,   துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பா பழனிசாமி இணைந்து கூட்டாக செய்தியாளர்களை 

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும், அவைத்தலைவர் மதுசூதனனுக்கு உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை எனவும், அவர் சம்மதத்துடனேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.

தொடர்ந்து அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என  ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். 

வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர்  தங்கமணி 
அமைச்சர்  எஸ்.பி வேலுமணி
அமைச்சர்  ஜெயக்குமார்
அமைச்சர்  சி.வி.சண்முகம்
அமைச்சர்  காமராஜ்  
ஜேசிடி பிரபாகர் - முன்னாள் எம்.எல்.ஏ
மனோஜ் பாண்டியன்
பா மோகன் - முன்னாள் அமைச்சர்
ரா. கோபால கிருஷ்ணன்  முன்னாள் எம்.பி
கி மாணிக்கம் - சோழவந்தான் தொகுதி 

இதில் 5 பேர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இனிப்பு வழங்கியும் , பட்டாசு வெடித்தும் உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் - டிடிவி தினகரன்
சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2. அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் - கமல்ஹாசன்
அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் - தலைமை அறிவிப்பு
அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
4. அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா ? - "கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க...!- சசிகலா
அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என கூறினார்
5. அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்
அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.