சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர்.
சென்னை,
அதிமுக முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல், அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் கூறி வந்த மாறுபட்ட கருத்துக்களுக்கு அதிமுகவின் இன்றைய அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதையடுத்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதிமுக மூத்த நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story