சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கம்
சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துக்களை முடக்கி வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
சென்னை
சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டது. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது.
சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் சொத்துக்களையும் வருமான வரித்துறை முடக்கியது
முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடப்பட்டு உள்ளது.
2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story