மாநில செய்திகள்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.399.93 கோடி வரப்பெற்றுள்ளது - தமிழக அரசு தகவல் + "||" + A total of Rs.399.93 crore has been received from the Chief Minister's General Relief Fund - Government of Tamil Nadu

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.399.93 கோடி வரப்பெற்றுள்ளது - தமிழக அரசு தகவல்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.399.93 கோடி வரப்பெற்றுள்ளது - தமிழக அரசு தகவல்
கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.399.93 கோடி வரப்பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுகளில் அரசுக்கு உதவும் வகையில் பொதுமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள தகவலின்படி, 21.7.2020 வரை தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து மொத்தம் 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் வரப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, 22.7.2020 முதல் 7.10.2020 வரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை 399 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 366 ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாட்களில் நிவாரண நிதி அளித்த நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தொடர்யது அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், தமிழக முதல்வர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.