தலைமை செயலக பணியாளர்கள் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல்-அமைச்சருக்கு, தலைமை செயலக சங்கம் கடிதம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் அளித்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை,
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்காக 100 சதவீத பணியாளர்களும் தலைமை செயலகத்துக்கு தொடர்ந்து பணிக்கு வருகின்றனர். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், காவலர்கள் உள்பட பலரும் தினமும் பணிக்கு வருகின்றனர்.
ஆனால் கடந்த 2 வாரங்களில் தலைமை செயலகத்தில் பணியாற்றும் 200 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மூலம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், உடன் பயணித்தோருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் சமூக இடைவெளியின்றி பணியாற்றுவது மேலும் தொற்று பரவுவதை அதிகரிக்கும். எனவே மத்திய அரசின் அலுவலக குறிப்பாணையில் உள்ளபடி, 50 சதவீத பணியாளர்களை மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், வாழ்வியல் நோயுள்ளவர்கள் ஆகியோருக்கு அலுவலகத்துக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story