மாநில செய்திகள்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் + "||" + DMDK Leader Vijayakanth discharged from hospital

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார்.
சென்னை,

தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து  இருவரும் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில்  இருந்து கடந்த 2 ஆம் தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  

இந்நிலையில் விஜயகாந்த்  கடந்த 6 ஆம் தேதி  மீண்டும்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2 அம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தேமுதிக தலைவர்  விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று  வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் முறையான சிகிச்சைக்கு பிறகே அவர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு: விஜயகாந்தை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த தொண்டர்கள்
அருப்புக்கோட்டைக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வந்தார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் திளைத்தனர்.
2. வேனில் அமர்ந்தபடி சென்னையில் வீதி வீதியாக பிரசாரம் செய்த விஜயகாந்த் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு
தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் வீதி, வீதியாக வேனில் உட்கார்ந்தபடி சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
3. கொரோனா பரிசோதனைக்கு முதலில் மறுப்பு தெரிவித்து பிறகு ஒப்புக்கொண்ட பிரேமலதா
விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
4. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சந்திப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
5. ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு
ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு.