மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி


மாநிலங்கள் இடையே செல்ல  தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
x
தினத்தந்தி 9 Oct 2020 5:50 PM IST (Updated: 9 Oct 2020 5:50 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்கள் இடையே செல்ல தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

கொரோனா பெருந்தொற்று  காரணமாக தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கும் இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. 

ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, மாவட்டங்களுக்கு இடையேயான இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்தது. எனினும், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ பாஸ் பெறும் நடைமுறை அமலில் உள்ளது. 

இந்த நிலையில்,  வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை  உயர் நீதிமன்றம்,   மாநிலங்கள் இடையே மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில்  தமிழக அரசு இ - பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் செப். 12ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்துள்ளது. 

Next Story