நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணி குறித்து வரும் 14ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
நாகர்கோவிலில், வரும் 14 ம் தேதி தமிழக முதல்வர் பங்கேற்கும் கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
சென்னை,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 14 ம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணி உள்பட பல்வேறு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆய்வு கூட்டத்தின் போது பல்வேறு வளர்ச்சி பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியை ஒட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் புனரமைக்கப்பட்டு வருவதோடு கூட்டம் நடைபெறும் அரங்கத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் போன்றவற்றுடன் சோதனையிடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story