வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்" - முதலமைச்சர் பழனிசாமி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
சென்னை,
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளன. புயல் காலத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய, மாநில பேரிடர் மீட்டுக்குழு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story