ராஜஸ்தானில் பூசாரி எரித்துக்கொலை: காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன்? - மாயாவதி கேள்வி
ராஜஸ்தானில் கராலி மாவட்டத்தில் பாபுலால் வைஷ்ணவா என்ற பூசாரி, உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
லக்னோ,
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உத்தரபிரதேசத்தை போலவே, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானிலும் எல்லாவகையான குற்றங்களும் நடக்கின்றன. அப்பாவிகள் கொலை, தலித்துகள், பெண்கள் மீதான வன்முறை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இரு மாநிலங்களிலும் காட்டாட்சி நடந்து வருகிறது. ராஜஸ்தானில் கராலி மாவட்டத்தில் பாபுலால் வைஷ்ணவா என்ற பூசாரி, உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். அதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள், ராஜஸ்தான் அரசை கண்டிக்காமல் மவுனம் சாதிப்பது ஏன்?
இதன்மூலம், உத்தரபிரதேசத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை காங்கிரசார் சந்தித்தது, ஓட்டு வங்கி அரசியலுக்காகத்தான் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story