நீலகிரியில் தொடரும் மழை; “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்” - மாவட்ட ஆட்சியர் தகவல்


நீலகிரியில் தொடரும் மழை; “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்” - மாவட்ட ஆட்சியர் தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2020 10:00 AM IST (Updated: 13 Oct 2020 10:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, கூடலூர், நடுவட்டம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டத்தின் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீடிக்கும் கனமழையால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகன விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பேரிடர் அபாயம் உள்ள 456 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ள பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Next Story