சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி


சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி
x
தினத்தந்தி 13 Oct 2020 5:25 PM IST (Updated: 13 Oct 2020 5:25 PM IST)
t-max-icont-min-icon

சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை,

இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு, பரிசுகளை வழங்குகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த மதுரேசன் என்னவர் வழக்கு தொடர்ந்தார். 

இந்த நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என கேள்வியெழுப்பினர். மேலும், 90 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற மாற்று திறனாளிக்கு, பத்தாவது மட்டுமே படித்த காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர்.

Next Story