ஐகோர்ட்டு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஓய்வு
ஐகோர்ட்டு நீதிபதியாக பனியாற்றிய கே.ரவிச்சந்திரபாபு நேற்று ஓய்வு பெற்றார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவர் கே.ரவிச்சந்திரபாபு. இவர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில், வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. இதில், ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவை வாழ்த்தி, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் பேசினார். அதைதொடர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பேசினார். அவருக்கு தலைமை நீதிபதி நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார்.
2011-ம் ஆண்டு ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ரவிச்சந்திரபாபு, விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர். 1984-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல் ஆர்.காந்தியிடம் ஜூனியராக பணியாற்றினார். இந்த நிலையில் தன்னுடைய 62 வயதில் நேற்று அவர் ஓய்வு பெற்றார். இதனால், ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக குறைந்துள்ளது. காலிபணியிடம் 22 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story