2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 180 தொகுதிகளை கைப்பற்றுவது உறுதி - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்


2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 180 தொகுதிகளை கைப்பற்றுவது உறுதி - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
x
தினத்தந்தி 18 Oct 2020 10:59 AM IST (Updated: 18 Oct 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 150 முதல் 180 இடங்களை கைப்பற்றுவது உறுதி என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் அதிமுகவின் 49ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். அதன் பின்னர் பேசிய அவர், கடந்த தேர்தலில் ஆத்தூர் தொகுதியை இழந்துவிட்டோம் என்றும் அடுத்த தேர்தலில் அதனை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் 150 முதல் 180 தொகுதிகளை கைப்பற்றுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story