பாபநாசம் அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்வு


பாபநாசம் அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 18 Oct 2020 7:32 AM GMT (Updated: 18 Oct 2020 7:32 AM GMT)

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி,

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது பாபநாசம் அணையாகும். இந்த அணையின் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

பாபநாசம் அணைக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இன்னும் துவங்தாத நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் கடந்த 2 நாட்களாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இன்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 108 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,901 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 304 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Next Story