முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்


முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
x
தினத்தந்தி 18 Oct 2020 1:55 PM IST (Updated: 18 Oct 2020 1:55 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

சேலம்,

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் அதிமுகவில் இணைந்தனர். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தாங்கள் இருக்கும் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.

கட்சியில் இணைந்த சுமார் 200க்கும் மேற்பட்டோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story