சென்னையில் இடியுடன் கூடிய கனமழை


சென்னையில் இடியுடன் கூடிய கனமழை
x
தினத்தந்தி 20 Oct 2020 7:57 AM IST (Updated: 20 Oct 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை, 

சென்னையில் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் திருவான்மியூர், பட்டினப்பாக்கம், அண்ணாசாலை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

முன்னதாக மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதால், பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர், அரியலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

Next Story