வேதா நிலையம் விவகாரம்: நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு


வேதா நிலையம் விவகாரம்: நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 20 Oct 2020 1:13 PM IST (Updated: 20 Oct 2020 1:13 PM IST)
t-max-icont-min-icon

வேதா நிலையம் விவகாரம் தொடர்பாக, நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, 

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்துக் கொடுக்கும் விவகாரம் தொடர்பாக, தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வேதா நிலையத்துக்கு ரூ.68 கோடி இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாசிட் செய்திருந்த நிலையில், வருமான வரி பாக்கியை வழங்க கோரி வருமான வரித்துறை மனுத்தாக்கல் செய்தது. இதுகுறித்து நவ.5ஆம் தேதிக்குள் பதிலளிக்க தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story