சென்னையில் பல்வேறு இடங்களில் மழை


சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
x
தினத்தந்தி 22 Oct 2020 10:34 AM GMT (Updated: 2020-10-22T16:04:13+05:30)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை, 

வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது தற்போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. மேலும் அதனோடு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்து இருக்கிறது.

இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் இன்று (வியாழக்கிழமை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சென்னையில் எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, மெரினா,ராயப்பேட்டை,காசிமேடு, திருவல்லிக்கேணி எழும்பூர், கோடம்பாக்கம், சூளைமேடு, ஐயப்பன்தாங்கல், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னையின் புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Next Story