சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் வரும் 26ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து அக்டோபர் 26ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 3.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்
திருச்சியில் இருந்து அக்டோபர் 26ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
தஞ்சாவூரில் இருந்து அக்டோபர் 26ஆம் தேதி இரவு 9.50க்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடையும். சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 27ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 6 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
இது குறித்த முழு விவரங்களை ரயில்வே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story