வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை தொடர்ந்து பின்னடைவு


வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு  உடல் நிலை  தொடர்ந்து பின்னடைவு
x
தினத்தந்தி 26 Oct 2020 11:27 AM IST (Updated: 26 Oct 2020 11:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

கொரோனா தொற்று பாதித்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 90 சதவீத நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து, முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனைக்கே நேரில் சென்று கேட்டறிந்தனர். 

இந்த நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து பின்னடைவாக உள்ளது  எனவும் எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story