மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
x
தினத்தந்தி 27 Oct 2020 8:51 AM IST (Updated: 27 Oct 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,124 கனஅடியில் இருந்து 14,210 கனஅடியாக சரிந்துள்ளது.

சேலம்,

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,542 கனஅடியாக இருந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,124 கனஅடியில் இருந்து 14,210 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.70 அடியாகவும், நீர் இருப்பு 62.75 டிஎம்சியாகவும் உள்ளது.

டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் 9,000 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 8000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகம் என்பதால், அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

Next Story