மாநில செய்திகள்

பள்ளிகள், திரையரங்குகள் திறப்பு எப்போது? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் + "||" + When do schools and theaters open? - Chief Minister Edappadi Palanisamy Plan

பள்ளிகள், திரையரங்குகள் திறப்பு எப்போது? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

பள்ளிகள், திரையரங்குகள் திறப்பு எப்போது? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ குழுவின் பரிந்துரைப்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் உடனாக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு உரிய முடிவெடுக்கப்படும். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ததன் மூலம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு எதிரொலி மும்பை, தானேயில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக மும்பை, தானேயில் பள்ளிகள் திறப்பு டிசம்பர் 31-ந் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
2. திரையரங்குகளை திறக்க நடவடிக்கை: உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
3. தமிழகத்தில் "பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப்பின் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்
புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆர்வமுடன் வந்த மாணவ, மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
5. மேற்குவங்கத்தில் அக். 1 முதல் நாடகங்கள், இசை, நடனம், மேஜிக் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி
மேற்குவங்கத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார்.