10,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு
10,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,
10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது.
அதன்படி,10,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்றும், 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாளும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்திருந்தது. அதில் 10ம் வகுப்பு. துணைத்தேர்வு முடிவு இன்று காலை 11 மணிக்கும், 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 10,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்..
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் பெறும் மாணவர்கள் மட்டுமே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்றும்,. விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்தின் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க கூடாது என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
இன்று வெளியான 12-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 12% பேரும், 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 39 ஆயிரம் பேர் தனித்தேர்வை எழுதியநிலையில் சுமார் 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story