“பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” - பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன்
பெண்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன் என பா.ஜ.க. மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை,
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உழைக்கும் ஒவ்வொரு எளிய தொண்டனுக்கும் உரிய கௌரவத்தையும், மரியாதையையும் பா.ஜ.க. வழங்கி வருகிறது என்பதற்கு எனது நியமனம் ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுடைய முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்களை நம்மால் செயல்படுத்த முடியும். பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்காக நான் பாடுபடுவேன். எனக்கு வாய்ப்பளித்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story