தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி - முதல்வர் அறிவிப்பு


தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி - முதல்வர் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2020 12:58 PM GMT (Updated: 31 Oct 2020 1:14 PM GMT)

9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில்  தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (அக் 31) முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு:

  •  9,10,11 ,மற்றும்  12 ஆம் வகுப்புகள் வரும் 16 ஆம்தேதி முதல் செயல்பட அனுமதி
  • பள்ளி, கல்லுரி பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
  • அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி
  • திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி
  • தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி
  • 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட திரையரங்குகளுக்கு நிபந்தனை
  • நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி
  • காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம்
  • புறநகர் ரெயில் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி

Next Story