தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள், மின் உற்பத்தி, நுகர் பொருள் வாணிப கழகம், தேயிலை தோட்ட கழக ஊழியர்கள் என தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தர ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 1.67 சதவிகிதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவிகிதம் போனசாக கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர்.
2 லட்சத்து 91 அயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210.48 கோடி ரூபாய் போனஸ், கருணைத்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story