தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார்.
சென்னை,
தமிழக ஆளுநர் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். வரும் வெள்ளிவரை டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வேல் யாத்திரை, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் உள்ளநிலையில் ஆளுநரின் இந்த திடீர் பயணம் அமைந்துள்ளது.
முன்னதாக சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்தநிலையில், ஆளுநர் இந்த பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story