கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Nov 2020 12:01 PM IST (Updated: 4 Nov 2020 12:01 PM IST)
t-max-icont-min-icon

கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னை, 

கோயில் நிலங்களை அரசின் பிறதுறைகளுக்கு பயன்படுத்துவதை எதிர்த்த வழக்கில், கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும், கோயில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்றும் நீதிபதி மகாதேவன் கூறினார்.

முன்னதாக இதுதொடர்பாக வி.பி.ஆர்.மேனன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. 

Next Story