முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கடந்த மாதமே பல்வேறு மாநிலங்களில் வகுப்புகள் தொடங்கின.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு அக்டோபர் 31-ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.
பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்படவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளோடு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story