அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்


அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்
x
தினத்தந்தி 5 Nov 2020 5:47 PM IST (Updated: 5 Nov 2020 6:03 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது.  கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story