கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


கடலோர மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 9 Nov 2020 1:56 PM IST (Updated: 9 Nov 2020 1:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து  பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையில் அவ்வப்போது கனமழை கொட்டி வருகிறது. மற்ற நேரங்களில் வெயில் அடிக்கிறது. இந்நிலையில், கடலோர மாவட்டங்களில்  மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நவ.12 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை  தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,  அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story