தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள்
சென்னை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை,
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பொதுப் போக்குவரத்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதாமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், நாளை முதல் 3 நாட்களுக்கு, சென்னையில் உள்ள 5 பேருந்து நிலையங்களில் இருந்து 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு பேருந்துகள் அனைத்தும் நவம்பர் 11ஆம் தேதி(நாளை) முதல் 13ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சிறப்புப் பேருந்துகள் பின்வரும் 5 இடங்களிலிருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
2. தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (மெப்ஸ்) மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்
3. பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் (கோயம்பேடு)
5. கே.கே. நகர் பேருந்து நிலையம்.
Related Tags :
Next Story