நதிகள் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


நதிகள் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 10 Nov 2020 6:27 PM IST (Updated: 10 Nov 2020 6:27 PM IST)
t-max-icont-min-icon

நதிகள் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு நடத்தினார். 

முதற்கட்டமாக, நாகர்கோவிலில் உள்ள  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், சுமார் 60 கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்பில் 36 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், 153 கோடியோ 92 லட்ச ரூபாய் மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இது தவிர, 54 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்பில் 2, ஆயிரத்து 736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கன்னியாகுமரி மாவட்டத்தில் 7,911 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. குழித்துறை குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. நதிகள் தொடர்பாக, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று தெரிவித்தார்

Next Story