தூத்துக்குடியில் 12 இடங்களில் அபாயகரமான உலோகங்கள்- கனிமொழி டுவிட்


தூத்துக்குடியில் 12 இடங்களில் அபாயகரமான உலோகங்கள்- கனிமொழி டுவிட்
x
தினத்தந்தி 11 Nov 2020 10:44 AM IST (Updated: 11 Nov 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அபாயகரமான உலோகங்கள் இருக்கும் பகுதிகளை சீர்செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி கூறி உள்ளார்.

சென்னை,

தூத்துக்குடியில் 12 இடங்களில் அபாயகரமான உலோகங்கள் இருப்பதாக தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து கனிமொழி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: - 

தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனைகளில், 12 இடங்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அபாயகரமான உலோகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.  

தமிழக அரசு, இப்பகுதிகளை சீர்செய்ய, வல்லுனர்களோடு ஆலோசித்து. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலத்தடி நீர் மற்றும் பூமியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி தருவதை தவிர்க்க வேண்டும்” எனத்தெரிவித்துள்ளார்.

Next Story