மாநில செய்திகள்

எனக்கு விவசாயம் தெரியும்; ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? முதல்வர் பழனிசாமி விமர்சனம் + "||" + DMK does everything and only blames AIADMK - Chief Minister Palanisamy

எனக்கு விவசாயம் தெரியும்; ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? முதல்வர் பழனிசாமி விமர்சனம்

எனக்கு விவசாயம் தெரியும்; ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? முதல்வர் பழனிசாமி விமர்சனம்
நான் விவசாயம் எனும் தொழில் செய்கிறேன், மு.க.ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, போலி விவசாயி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “ எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும். 

விவசாயி என்ற சான்றிதழை அவர் எனக்குத் தர தேவையில்லை. நான் விவசாயம் எனும் தொழில் செய்கிறேன், மு.க.ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது. முதலமைச்சராக இருக்கும் போதும் கூட விவசாயத்தைத் தொடர்ந்து வருகிறேன். நான் சிறுவயது முதலே எவ்வளவு கடின உழைப்பாளி என்பது என் ஊர் மக்களைக் கேட்டால் தெரியும்” என்றார்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்குத் தேவையான வசதிகள் உள்ளன.  சுமார் 2.24 லட்சம் பேரிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. பள்ளிகளை தற்போது திறந்தால் கொரோனா பரவும் என சிலர் அச்சம் தெரிவித்தனர். பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பில் முடிவு எடுக்கப்படும்.  ஒரே வருடத்தில் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கியது அதிமுக அரசு - முதல்வர் பழனிசாமி பிரசாரம்
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கியது அதிமுக அரசு என முதல்வர் பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
2. வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்
வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3. முதலீடுகள் பற்றி முதல்வர் பழனிசாமி கூறிய பொய்யின் சாயம் வெளுத்துவிட்டது - மு.க.ஸ்டாலின்
முதலீடுகள் பற்றி முதல்வர் பழனிசாமி கூறிய பொய்யின் சாயம் வெளுத்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 - முதல்வர் அறிவிப்பு
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
5. வடமாநிலங்கள் போல் தமிழகத்திலும் துப்பாக்கி கலாச்சாரம் பரவுகிறதா?-ஸ்டாலின் கேள்வி
வடமாநிலங்கள் போல் தமிழகத்திலும் துப்பாக்கி கலாச்சாரம் பரவுகிறதா? என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.