சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு கூடுதலாக 204 மின்சார ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல்


சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு கூடுதலாக 204 மின்சார ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல்
x

சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு கூடுதலாக 204 மின்சார ரெயில்கள் இயக்க உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் மின்சார ரெயில்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ரெயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது. இதையடுத்து அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதைத் தொடர்ந்து இந்த சிறப்பு மின்சார ரெயில்களில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயணம் செய்யலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்தது. இதையடுத்து தற்போது கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்க உள்ளதாக தெற்கு ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கொரோனா தடுப்பு முதல் நிலை பணியாளர்களுக்காக தற்போது 150 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் கூடுதலாக 204 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையின் புறநகர்களான ஆவடி, கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் மற்றும் எம்.ஜி.ஆர் சென்டிரல் இடையே இந்த 204 மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story