தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு
x
தினத்தந்தி 12 Nov 2020 12:26 PM IST (Updated: 12 Nov 2020 12:26 PM IST)
t-max-icont-min-icon

ஒரு கிராம் தங்கம் ரூ.4,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து 38 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து ரூ.4,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.66.90-க்கு விற்பனை ஆன நிலையில் இன்று 10 காசுகள் உயர்ந்து ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story