தேர்தல் நெருங்கிருச்சு...! அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழுக்கள் அறிவிப்பு


தேர்தல் நெருங்கிருச்சு...! அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழுக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Nov 2020 1:07 PM IST (Updated: 13 Nov 2020 1:07 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை

அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சிவி சண்முகம், ஓஎஸ் மணியன், கோகுல இந்திரா, ஜேசிடி பிரபாகர், அன்வர் ராஜா, வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரக் குழுவில், மு.தம்பிதுரை, வைகைசெல்வன், இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர, செய்தியாளர்களை சந்திக்கும் குழுவில் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் காமராஜ், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பரமசிவம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

எதிர்க்கட்சிகளின் அறிக்கைக்கு பதிலளிக்கும் குழுவில், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் ஜெயக்குமார், செம்மலை, அமைச்சர் விஜயபாஸ்கர், ரபி பெர்னார்ட், மருது அழகு ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

அதிமுக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக மருது அழகுராஜ், ரபி பெர்னார்ட் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தேர்தல் பணிகளையும், கட்சிப் பணிகளையும் விரைவுப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களுக்கு மண்டலப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 


Next Story