பண்டிகை கொண்டாட சென்றவவர்கள் ஊர் திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்றவர்கள் ஊர் திரும்புவதற்காக வரும் 18 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை,
தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப வசதியாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை 8 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் உள்பட 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னைக்கு மட்டும் 3,416 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்களின் வசதிக்காக 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 4 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பலரும் சொந்த ஊரில் இருந்து பணியாற்றும் இடத்துக்கு நேற்று காலை முதல் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story