நடப்பு கல்வி ஆண்டுக்கான மீதமுள்ள கட்டணத்தை பிப்.,28-க்குள் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி


நடப்பு கல்வி ஆண்டுக்கான மீதமுள்ள கட்டணத்தை பிப்.,28-க்குள் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 18 Nov 2020 5:57 PM IST (Updated: 18 Nov 2020 5:57 PM IST)
t-max-icont-min-icon

நடப்பு கல்வி ஆண்டுக்கான மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்.,28-க்குள் வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுவதாகவும், ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள் இருப்பதாகவும், தனியார் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடப்பு கல்வி ஆண்டுக்கான மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்ரவரி 28-க்குள் வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும் முழு கட்டணத்தை வசூலித்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவம்பர் 27-க்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Next Story