ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம், அவர் நலமாக இருக்க வேண்டும் - கமல்ஹாசன்


கமல்ஹாசன் - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு
x
கமல்ஹாசன் - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு
தினத்தந்தி 1 Dec 2020 12:37 PM IST (Updated: 1 Dec 2020 12:37 PM IST)
t-max-icont-min-icon

எல்லோரிடமும் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.  கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இன்று  கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபுவுக்கு தலைமை அலுவலக பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில்,   “ 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் எனது சுற்றுப்பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

எல்லோரிடமும் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா. ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம்.  ரஜினி நலமாக இருக்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ” என்றார்.

Next Story