“சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி” - பாமக நிறுவனர் ராமதாஸ்


“சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி” - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
தினத்தந்தி 1 Dec 2020 9:03 PM IST (Updated: 1 Dec 2020 9:03 PM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வன்னியர்களுக்கு 20 சதவீத  இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில்  முதலமைச்சர் பழனிசாமியை பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். அப்போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத  இடஒதுக்கீடு அளிக்க முதல்வரிடம் வலியுறுத்தினார். 

இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி என்று கூறியுள்ளார். எனவே காலம் தாழ்த்தாமல் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story