சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் சந்திப்பு
அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என ரஜினி தெரிவித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். பின்னர், தனது அரசியல் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றார். இதனால், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், ரஜினிகாந்த் எடுக்கப்போகும் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story