சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை 244-ல் இருந்து 320 ஆக அதிகரிப்பு - தெற்கு ரயில்வே

சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை 244-ல் இருந்து 320 ஆக அதிகரிப்பு - தெற்கு ரயில்வே
x
தினத்தந்தி 4 Dec 2020 8:05 PM IST (Updated: 4 Dec 2020 8:05 PM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் ரயில் சேவையின் ரயில் எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை புறநகர் ரயில் சேவையின் ரயில் எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவை கடந்த மாதம் அத்தியாவசிய பணியாளர்களும், பெண்களும் பயணிக்க மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவையின் ரெயில் எண்ணிக்கை டிசம்பர் 7ஆம் தேதி முதல் 244ல் இருந்து 320ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் காலை 7.00 - 9.30 மணி வரையும், மாலை 4.30 - 7.00 மணி வரையும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story