ரஜினி கட்சி அறிவிப்பு: ஓ.பன்னீர் செல்வம் கருத்து அவரது சொந்த கருத்து - முதல்-அமைச்சர் பழனிசாமி


ரஜினி கட்சி அறிவிப்பு: ஓ.பன்னீர் செல்வம் கருத்து அவரது சொந்த கருத்து - முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 5 Dec 2020 12:59 AM GMT (Updated: 5 Dec 2020 12:59 AM GMT)

வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர்  ஜனவரியில் கட்சி தொடக்கம், டிச.31-ம் தேதி அறிவிப்பு என டுவிட்டரில் அறிவித்தார். தொடர்ந்து அளித்த பேட்டியில் 

தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும், இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை.  தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. அரசியல் மாற்றம் தேவை... கட்டாயம் நிகழும்.  தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான் என புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார்

ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்

ரஜினி கட்சி ஆரம்பிப்பதால் அவர் பாஜக கூட்டணியில் இருப்பாரா?, பாஜக கூட்டணியில் அதிமுக இருக்குமா? அல்லது பாஜக, ரஜினி, அதிமுக ஒன்றாகத் தேர்தலைச் சந்திப்பார்களா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

இதனிடையே ரஜினி கட்சி தொடங்கும் அறிவிப்பு குறித்து  துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  அளித்த பேட்டியில்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அவர், வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால், சென்னையில் பேட்டி அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  ஓபிஎஸ்ஸின் கருத்து அவரது சொந்தக் கருத்து. ரஜினி கட்சி தொடங்குவது குறித்து யாரும் கருத்தைச் சொல்லலாம். எம்ஜிஆர் மிகப்பெரிய தலைவர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரோடு ஒப்பிட்டுக் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

சிவகங்கையில் முதல் அமைச்சர் பழனிசாமியில்  ரஜினியின் கட்சி அறிவிப்பு குறித்துக் கேட்டபோது ரஜினி கட்சியைப் பதிவு செய்யட்டும். அதற்குப் பிறகு கேளுங்கள். அவர் அறிவிப்பு மட்டுமே செய்துள்ளார். ரஜினி, கட்சியைப் பதிவு செய்தவுடன் வந்து கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். அதுதான் சரியாக இருக்கும். ஓ.பன்னீர் செல்வம்  அவரது சொந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது'' என்று தெரிவித்தார்.

Next Story