சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3 வேளை உணவு வழங்க உத்தரவு


சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3 வேளை உணவு வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 5 Dec 2020 4:31 PM IST (Updated: 5 Dec 2020 4:31 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3 வேளை உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாளை முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை இலவச உணவு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்வரின் உத்தரவுப்படி, சென்னையில் சுமார் 5.3 லட்சம் குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் நிலையில், மொத்தம் 26 லட்சம் மக்களுக்கு நாளை முதல் இலவச உணவளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நாளை காலை உணவு தொடங்கி, டிசம்பர் 13-ம் தேதி இரவு வரை குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாள்தோறும் மூன்று வேலையும் இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சமுதாய நலக் கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம், குடிசைப் பகுதி மக்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கவிருக்கிறது சென்னை மாநகாரட்சி ஆணையர் பிரகாஷ் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.


Next Story